கோமாதா என்று போற்றப்படும் பசுவுக்கு ரிக்வேதம் பின்பக்கமாகவும், யஜீர்வேதம் நடுப்பகுதியாகவும், சாமவேதம் கழுத்தாகவும், இஷ்டம் பூர்த்தம் ஆகியன இரு கொம்பு களாகவும், அதன் உரோமங்கள், சகல சுத்தங்களாகவும், சாந்தி கர்மம் புஷ்டி கர்மம் ஆகியவை கோமய மாகவும், வேதம் வகுத்தெடுத்த நான்கு வருணங்களே பசுவின் பாதங்களாகவும், சுவாஹா, ஸ்வதா, வஷம், ஹந்த என்ற நான்கும் அதன் காப்புகளாகவும், இவற்றின் மூலம் தேவர்களையும் மானிடர்களை யும் ஊட்டி வளர்க்கிறாள் நம் கண் முன்னே தோன்றும் பெண் தெய்வமான கோ மாதா.
லலிதா சகஸ்ர நாமத்தில் கோமாதா:-
அம்பிகை வழிபாட்டில் அம்பாளின்ஆயிரம்நாமங்களைக் கொண்டுபோற்றிப்பாடலாகஉயர்ந்தசக்திவேதமந்திரமாகவிளங்குவதுலலிதாசகஸ்ரநாமபோற்றித் திருமாலை. அதில் 605-வது நாமாவளி வரியாக வருவதுதான் கோமாத்ரே நம என்பது. இதன் பொருள் கோமாதா என்னும் தாய் போல விளங்குபவளே என்பதாகும். ஆம்! கோமாதாவை வழிபடாத இலக்கியங்களோ, புராணமோ இக்கலியுகத்தில் இல்லை என்றே சொல்லலாம்.நன்றி